சென்னை கீழ்கட்டளையில் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் ரூ.14 லட்சத்தை பறித்து சென்றனர்.
கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை வேளச்சேரியை அடுத்துள்ள கீழ்கட்டளையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இங்கு நேற்று மதியம் திடீரென்று காரில் வந்த ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் வங்கியில் உள்ளவர்களை மிரட்டி ரூ 14 லட்சம் வங்கி பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளையர்கள் மாருதி ஆம்னி வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவன் இந்தியில் பேசியதால் வடநாட்டு கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கொள்ளை நடந்த வங்கியில் கண்காணிப்பு கேமரா இல்லாததும் துப்பாக்கி ஏந்திய காவலர் இல்லாததும் கொள்ளையடிக்க ஏதுவாக அமைந்துள்ளது. இதனால் கொள்ளை எளிதாக நடந்துள்ளது. மேலும் வங்கியிலிருந்து அருகில் உள்ள ஸ்டேஷனுக்கு அபாயமணி தொடர்பு இருந்தும் கொள்ளை நடந்தபோது வங்கியில் இருந்தவர்கள் அதை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
கொள்ளையர்கள் வந்த வாகனம் பற்றிய அடையாளம் தெரியவந்ததால் சென்னை முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது கொள்ளை நடந்த வங்கிக்கு உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்களை வளைத்து பிடிக்க வேண்டி தீவிர ஏற்பாடுகளை சென்னை நகர போலீசார் எடுத்து வருகின்றனர்.