Sunday, May 12, 2013

கீழ்க்கட்டளை ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு! (Videos, Photos)

சென்னை மாநகரின் கீழ்க்கட்டளை பெரிய தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு 12/05/2013 ஞாயிற்றுக் கிழமை அன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

 ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து பெருமாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர். சரியாக 7.45 மணியளவில் கலசங்களுக்கு புனித நீர் கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற்றது.

 கும்பாபிஷேக நிகழ்வின் பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 விழாவில் குவிந்த ஏராளமான பக்தர்களை சென்னை பொலிஸார் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை வழங்கி சிறப்பாக ஒழுங்கமைத்தனர்.














Wednesday, April 3, 2013

Saturday, September 22, 2012

கீழ்க்கட்டளையில் அம்மாவை வறுத்தெடுத்த திண்டுக்கல் லியோனி!

புகழ்பெற்ற நகைச்சுவைப் பட்டிமன்றப் பேச்சாளரான திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் இன்றைய தினம் கீழ்க்கட்டளையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை வறுத்தெடுத்தார்.

கீழ்க்கட்டளை பஸ் நிலையம் அருகில் உள்ள வீதியில் 22/09/2012 சனிக்கிழமை இரவு எட்டு மணியளவில் தி.மு.க அரசை ஆதரித்து உரையாற்றினார்.

வழமையாகவே தி.மு.க வின் அனுதாபியான இவர் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் நகைச்சுவை கலந்து விமர்சித்தார்.

முக்கியமாக ஜெயலலிதா அவர்கள் சமசீர் கல்வியை நிறுத்தியமை தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.

தி.மு.க வின் அரசவைக் கவிஞர் போல வரிக்குவரி கருணாநிதி புகழ் மாலை பாடினார் திண்டுக்கல் ஐ.லியோனி.





Wednesday, September 19, 2012

கீழ்க்கட்டளையில் பிரமாண்ட விநாயகர் சிலை!

இந்து மக்களால் புனிதமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இன்றைய தினம் சென்னையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இம்முறை சென்னையின் புறநகரான கீழ்கட்டளை சந்திக்கு அருகாமையில் வழமை போல பிரமாண்ட விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

இம்முறை அருள் விநாயகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 இன்று மாலை விநாயகர் சிலைக்கு பூஜை செய்வதையும் அதனை ஏராளமான அடியார்கள் சூழ நின்று வழிபடுவதனையும் படங்களில் காணலாம்.






Tuesday, September 18, 2012

கீழ்க்கட்டளையில் இடம்பெற்ற விஜயகாந்த் கட்சிக் கூட்டம்!

விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவும், தே.மு.தி.க கட்சி ஆரம்பிக்கப்பட்டு 8 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கீழ்க்கட்டளையில் இன்று மாலை இடம்பெற்றது. .









Thursday, September 6, 2012

கீழ்க்கட்டளையில் உதயமாகிய புதிய உடற்பயிற்சி கூடம் (GYM)!

கீழ்க்கட்டளையில் நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம் (GYM) ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

இது கீழ்க்கட்டளை பொலிஸ் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது.

ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் இங்கு உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

உடற்பயிற்சித் துறையில் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட பயிலுனர்களே இங்கு பயிற்சி அளிக்கிறார்கள் என்பது இதன் விசேட அம்சமாகும்.









Friday, August 10, 2012

பூத்துக் குலுங்கும் மொட்டை மாடி வீட்டுத் தோட்டம்!

சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டு வளவில் பூக்கன்றுகளை நாட்டிப் பராமரிப்பது என்பது கஷ்டமான காரியம் தான்.

இதற்குப் பிரதான காரணம் இங்கு நிலவுகின்ற இடப்பற்றாக்குறை தான்.

சென்னையின் புறநகர்ப் பகுதியான கீழ்க்கட்டளையில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடிப் பிரதேசத்தில் சாடிகளில் வைத்துப் பராமரிக்கப்படுகின்ற பூக்கன்றுகளே இவை.

இங்கு ரோஜா, மல்லிகை, செவ்வரத்தை, நந்தியாவட்டை போன்ற பூங்கன்றுகள் செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்குவதை படங்களில் காணலாம்.







சிலர் வீட்டு மொட்டைமாடியை பயனுள்ள வகையில் மரக்கறி உற்பத்திக்காகவும் பயன்படுத்தி வருகின்றார்கள்.