இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை.
இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது.
இந்து வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு.
துளசியில் பல வகைகள் காணப்படுகின்றன. இங்கே காணப்படும் துளசியானது கீழ்க்கட்டளைப் பகுதியில் உள்ள பூக்கன்றுகள் விற்கும் நிலையம் ஒன்றில் வாங்கப்பட்டது.
இந்த துளசியில் உள்ள விசேடம் என்னவென்றால், துளசி இலையைச் சாப்பிடும் போது விக்ஸ் வாசனை வீசும். அத்துடன் கொஞ்சம் காரமாகவும் இருக்கும்.
சளிக்கு சிறந்த மருந்தாக இந்த துளசி இலை உபயோகப்படுத்தப்படுகின்றது.
எங்கே நீங்களும் பாருங்களேன் அந்த வித்தியாசமான துளசியை...