Wednesday, May 16, 2012

கீழ்க்கட்டளை மாம்பழத்தின் தனி ருசி!


முன்னைய நாட்களில் கீழ்க்கட்டளையில் பல வீடுகளிலும் தென்னை மரங்களும், மா மரங்களும் இயல்பாகவே காணப்படும்.

 95 ஆம் ஆண்டுகளில் கீழ்க்கட்டளை பிரதேசம் மரக்கறிப் பயிர்கள் விளைகின்ற இடமாகவும், மரங்கள் நிறைந்த காடாகவுமே காட்சியளித்தது.

ஆனால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மரங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது.

இருந்தும் சில வீடுகள் கிராமத்து வீடுகள் போலவே இப்போதும் மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

அப்படியான வீடு ஒன்றில் உள்ள மா மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட மாம்பழங்களை உப்பும் தூளும் சேர்த்து நண்பர்கள் சிலர் ருசித்து சாப்பிடுவதனையே படங்களில் காண்கிறீர்கள்.

No comments:

Post a Comment