Thursday, August 2, 2012

காதல் குருவிகளின் (Love Birds) அழகிய படங்கள்!

லவ் பேர்ட்ஸ் எனப்படும் காதல் குருவிகளை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.

பலரும் இந்தக் குருவிகளை விரும்பி வளர்ப்பதை ஏராளமான வீடுகளில் காணலாம்.

அந்த வகையில் கீழ்க்கட்டளைப் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்படும் குருவிகளைத் தான் நீங்கள் படங்களில் காண்கின்றீர்கள். 

இந்தப் படங்கள் பல மணிநேரம் காத்திருந்து பொறுமையாக பிடிக்கப்பட்டவை.

இந்தக் குருவிகளை கீழ்க்கட்டளையில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனை நிலையமான MRF கடையிலும் வாங்க முடியும்.

இங்கு லவ் பேர்ட்ஸ், நாய்க்குட்டிகள், வண்ண மீன்கள், புறா, முயல், கூண்டுகள், போன்றவற்றை வாங்கலாம். ஆனால், இங்கு விலை கூடுதலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

லவ் பேர்ட்ஸ் குருவிகளை மலிவு விலையில் வாங்க விரும்பினால் வெள்ளிக்கிழமைகளில் கூடுகின்ற பல்லாவரம் சந்தைக்கு சென்று பேரம் பேசி வாங்கலாம்.

காதல் குருவிகள் செய்யும் காதலை நீங்களும் பாருங்கள். 








1 comment: